கலைஞரின் தலைமாட்டில் கண்ணீர் சிந்தும் முதல் குழந்தை! தீயாய் பரவும் புகைப்படம்

Report
324Shares

என் முதல் குழந்தை முரசொலிதான் என்பார் கருணாநிதி. தன் பிள்ளைக்கு போர்வாள் என்று பெயர் வைத்து, செல்லப்பெயராக முரசொலி என்று அழைத்தார்.

கருணாநிதிக்கும் முரசொலிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுமே போர்க்குணம் மிக்கது. மனதில் பட்டதை அப்பட்டமாக வெளிக்காட்டும் தன்மை உடையது.

கலைஞர்தான் முரசொலி, முரசொலிதான் கலைஞர். தன் எண்ண சிதறல்களின் வெளிப்பாடுதான் முரசொலி.

மனசாட்சியின் கண்ணாடிதான் முரசொலி. கலைஞர் சொல்லியதையும், எழுதியதையும் அப்படியே ஏற்று கோடி தொண்டர்களிடம் காலையில் முதல் வேலையாக ஒப்புவித்தது முரசொலி.

ஆரம்பத்தில் துண்டறிக்கையாக வெளிவந்தது. அதுவும் ஒரு நல்ல தாளில் கூட அச்சிட முடியாத நிலை. பின்னர் படிப்படியாக இயந்திர வளர்ச்சி, கட்சி வளர்ச்சியினை அடுத்து மெருகேறியது.

ஒரு நீண்ட நெடிய வரலாற்றை தன்னுடன் அடக்கிய அந்த முரசொலி இன்று கருணாநிதியின் தலைக்கடியில் கண்ணீர் சிந்தி வருகிறது.

தன் முதல் குழந்தை முரசொலி என்று அழைத்தால்தானோ என்னவோ, தந்தையின் தலைமாட்டிலேயே மகன் இப்போதும் தனயன் அழுது கொண்டிருக்கிறோனோ?

12263 total views