மகளை பறிகொடுத்த தந்தை செய்த காரியத்தை பாருங்கள்....கண்கலங்கி போயிடுவிங்க!....

Report
300Shares

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துபோன தனது மகளின் நினைவாக, மற்ற மாணவிகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்தி வரும் சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகம் மாநிலம் கல்புர்கி மாவட்டத்தை சேர்ந்த பசவராஜ். இவர் மக்தம்புரா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் தானேஸ்வரி உடல்நலக் குறைவால் கடந்தாண்டு இறந்து விட்டார்.

இந்த நிலையில்தான் மகளை இழந்த சோகத்தில் தவித்த பசவராஜூக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. தனது மகள் போன்று பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தார். இதையடுத்து, தனது பள்ளியில் படிக்கும் 45 மாணவிகளுக்கான கல்வி கட்டணத்தை கட்டியுள்ளார்.

இதுகுறித்து பசவராஜ் கூறுகையில், தனது மகளின் நினைவாக, ஏழை மாணவிகளுக்கு கல்வி கட்டணம் கட்ட முடிவு செய்து, சிலருக்கு பணமும் கட்டியுள்ளேன். வரும் ஆண்டுகளில் இதை தொடர்ந்து செய்வேன் என்று தெரிவித்தார்.

loading...