எந்நேரமும் கேம் விளையாடிய மகன்....உலகத்தை விட்டே அனுப்பிய தந்தை!...

Report
817Shares

உத்திரபிரதேசத்தில் எந்நேரமும் கேம் விளையாடிய மகனை அவரது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பாஸ்தி மாவட்டம் பரஸ்ராம்பூரைச் சேர்ந்தவர் ராகேஷ்.

இவரது மகன் ராகுல் (13). ராகுல் எந்நேரமும் செல்போனில் விளையாடிக் கொண்டே இருப்பான். ராகுலின் தந்தை பல முறை கண்டித்தும் சிறுவன் தொடர்ந்து செல்போன் கையுமாகவே சுற்றித் திரிந்துள்ளான்.

சமீபத்தில் சிறுவன் ராகுலை ராகேஷ் அழைத்துள்ளார். செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த ராகுல் அவரை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த ராகேஷ் பெத்த பிள்ளை என்றும் பாராமல் ராகுலை ஓங்கி நெஞ்சிலே மிதித்துள்ளார்.

ரத்த வாந்தி எடுத்த ராகுல் சம்பவ இடத்திலே உயிரிழந்தான். பின் மகனின் உடலை அங்குள்ள காட்டு பகுதியில் புதைத்து விட்டார் ராகேஷ்.

இந்நிலையில் சிறுவன் காணாமல் போனது குறித்து சிறுவனின் தாத்தா போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்தபோது ராகேஷ் முன்னுக்கு பின்னாக பதிலளித்தார்.

பின்னர் போலீஸார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் மகன் தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடியதால் அடித்து கொன்றேன் என தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெத்த பிள்ளையை அவரது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

27264 total views