வகுப்பறையில் மாணவியை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியர்! பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ

Report
160Shares

வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே மாணவியை வைத்து தனக்கு மசாஜ் செய்ய வைக்கும் பெண் ஆசிரியரின் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

தெலுங்கானா மாநிலம் ஜன்கன் மாவட்டத்தில் உள்ள நர்மதா என்ற பள்ளிக் கூடத்தில் 9 ஆம் வகுப்பு இயற்பியல் ஆசிரியர் பாட வேலைகளில் மாணவிகளை தனக்கு ஆயில் மசாஜ் செய்ய சொல்வது , தலை பின்னி விடச் சொல்வது என்பதுமாக வகுப்பறையில் முகம் சுளிக்கும் வகையில் நடந்து வந்துள்ளார்.

இதில் ஆத்திரப்பட்ட மாணவன் ஒருவன் , இதை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், தனது வகுப்பிற்கு நல்ல ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் ஆசிரியர் அவ்வாறு ஈடுபடும் போது அதை தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

விசாரனையில் அந்த ஆசிரியரின் பெயர் பார்வதி எனத் தெரியவந்துள்ளது. பார்வதியை நீக்கி விட்டு தங்களுக்கு நல்ல ஒரு ஆசிரியரை நியமிக்குமாறு அந்த பள்ளியின் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாணவன் பதிவு செய்த காணொளியில் ஆசிரியருக்கு மாணவி தலை பன்னி விடுவதும் அவரது தலைக்கு மசாஜ் செய்து விடுவதும் பதிவாகியுள்ளது.

சக மாணவர்கள் மத்தியில் பாடம் நடத்தும் வேலையில் ஆசிரியர் இவ்வாறு நடந்து கொள்வது மாணவர்களிடையே என்ன மாறியான மன நிலையை உருவாக்கும் ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

6991 total views