நியாய விலைக்கடையில் பெண்ணிடம் ஆபாசமாக நடந்த விற்பணையாளர்! கிராம மக்கள் செய்த செயல்

Report
43Shares

வேலூரில் ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லைக் கொடுத்த விற்பணையாளரை அப்பகுதி மக்கள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்துள்ள பெருங்கலத்தூரில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையின் விற்பனையாளராக பணியாற்றி வருபவர் தான் செல்வம்.

இந்நிலையில், நேற்று நியாயவிலைக் கடைக்கு பெண் ஒருவர் பொருட்கள் வாங்க வந்த போது விற்பணையாளர் செல்வம் அப்பெண்ணிடம் பாலியல் ரீதியில் ஆபாசமாக சீண்டியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அந்தப் பெண் அவரது கணவர் மற்றும் உறவினரிடம் கூறி அழுதுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் கணவர், உறவினர்கள் மற்றும் மக்கள் ரேஷன் கடையில் விற்பனையாளரை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கிராம மக்களுடன் பேசி விற்பனையாளரை விடுவித்தனர்.

அப்போது திடீரென கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண், அந்த விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தலையில் மண்ணெண்ணய் ஊற்றி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.

அங்கிருந்த காவலர்கள் அப்பெண்ணை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்திய காவலர்கள், விற்பனையாளர் செல்வம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனால் சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

2161 total views