மனைவியுடன் தகராறு செய்த தாய்க்கு மகன் கொடுத்த மரண பரிசு! நெஞ்சை உலுக்கும் சம்பவம்

Report
199Shares

மனைவியுடன் தகராறு செய்த தாயை மகனே அடித்துக்கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வாளவராயன்குப்பம் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி என்பவரே இவ்வாறு தாயை கொலை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கலியமூர்த்திக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அதற்கு பிறகுதான் வீட்டில் பிரச்சினை வெடித்துள்ளது.

மாமியாருக்கும் மருமகளுக்கும் ஏகபொருத்தமாக இருந்துள்ளது. ஆகாத மருமகள் கைப்பட்டால் குத்தம் கால் பட்டால் குத்தம் என மாமியாரும், மாமியாரால் தனது நிம்மதி போயிவிட்டதாக மருமகளும் நாள்தோறும் முடியை பிடித்துக்கொள்ளாத குறையாக சண்டைபோட்டு வந்துள்ளனர்.

அவர்களின் சண்டையால் தெருவே அல்லோகலப்பட்டுள்ளது. இதனால் நிம்மதியை இழந்த கலியமூர்த்தி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார்.

ஒரு கட்டத்தில் மாமியார் மருமகள் சண்டை முற்றவே தாயை அடித்துக்கொன்றார். பின்னர் வீட்டு தோட்டத்திலேயே அவரை புதைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தனது தாயை காணவில்லை என ஊர் மக்களை நம்ப வைத்துள்ளார். பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக காணமல் போன தாயை பொலிசாரும் உறவினர்களும் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் பெற்ற மகனே தாயை கொன்று புதைத்தை கண்டு பிடித்துள்ளனர்.

இதையடுத்து மகன் கலியமூர்த்தியை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாயை கொன்று புதைத்துவிட்டு காணாமல் போனதாக மகனே நாடகமாடியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6691 total views