அச்சுறுத்தும் ஆவியால் நள்ளிரவில் தொடரும் பூஜைகள்!. தினமும் வெளிவரும் புது புது அதிர்ச்சி தகவல்

Report
145Shares

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் செத்தாலும் செத்தார்கள், அந்த ஏரியாவே கதி கலங்கிப் போய்க் கிடக்கிறது.

ஆவி பயத்தில் அங்கு வசிப்போர் வீடுகளில் கணபதி பூஜை உள்ளிட்டவற்றை செய்கின்றனர்.

அப்பகுதியில் வீடுகளின் மதிப்பும் இறங்கி விட்டது. 11 பேரின் மரணம் குறித்து பற்பல தகவல்கள் பரவி வருவதாலும், இவர்கள் ஆவிகளாக சுற்றக்கூடும் என்று மக்கள் அஞ்சுவதாலும் இப்பகுதியில் வீடுகளின் மதிப்பு இறங்கி விட்டதாக ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் புலம்புகின்றனர்.

குறிப்பாக 11 பேரின் வீடு உள்ள சந்த் நகர் பகுதியில்தான் வீடுகளை விற்பதும், வாங்குவதும் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாம். மறுபக்கம் அந்த வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் வசிப்போர் ஆவி பயத்தில் பூஜைகளைப் போட்டபடி உள்ளனராம்.

ஜூலை 1ம் திகதி பவனேஷ் பாட்டியா மற்றும் அவரது தாயார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூண்டோடு தற்கொலை செய்து கொண்டனர்.

நேராக சொர்க்கத்திற்கு செல்வதற்காக மரணத்தை நாடியுள்ளனர் அவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இவர்களது மரணம் குறித்து தினசரி ஒரு பரபரப்பு தகவல் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளது. இதனால்தான் இப்பகுதியில் பீதி தொடர்கிறது.

5579 total views