நேருக்கு நேர் பறந்த இரு விமானங்களினால் மரண பீதியில் பயணிகள்! 200 அடி தூரத்தில் அலாரம் அடித்ததால் நடந்த அதிசயம்?

Report
609Shares

கர்நாடக மாநிலம் பெங்களூர் வான்வெளி எல்லைக்குட்பட்ட பகுதியில் இரு இண்டிகோ பயணிகள் விமானம் நேருக்கு நேர் மோதிக்கொள்ள இருந்த விபத்து தக்க நேரத்தில் தவிர்க்கப்பட்டு அதிஸ்டவசமாக பயணிகள் உயிர்தப்பியுள்ளனர்.

இந்த தகவலை இண்டிகோ விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம், இடம்பெற்றுள்ளது.

விபத்து தவிர்க்கப்பட்டதால் மொத்தம் 330 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு 162 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானமும், பெங்களூரில் இருந்து கொச்சிக்கு 166 பயணிகளுடன் புறப்பட்ட விமானமும்தான் விபத்துக்குள்ளாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் விமான பயணிகளிடம் பீதியை உருவாக்கியுள்ளது. இவ்விரு விமானங்கள் நடுவேயான செங்குத்து இடைவெளி என்பது, வெறும் 200 அடிகளாக மட்டுமே இருந்ததாம்.

விமான மோதல் தடுப்பு சிஸ்டம் அலாரம் (TCAS) உடனடியாக ஒலிக்கத் தொடங்கியதால் பைலட்டுகள் சுதாரித்துக்கொண்டு மோதலை தவிர்த்துள்ளனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதுதொடர்பாக, விமான விபத்து புலனாய்வு வாரியம் தனது விசாரணையை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

20015 total views