செல்போனில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டிய நபர் விபத்தில் மூளைச்சாவு

Report
137Shares

ஐதராபாத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்பேசியில் பேசிக்கொண்டு விதிகளை மீறி சாலையின் எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி மூளைச்சாவடைந்துள்ளார்.

ஐதராபாத்தில் 35வயது இளைஞர் செல்போனில் பேசிக்கொண்டே சாலையில் எதிர்ப்புறமாகச் சென்று மறுபுறத்தை அடைய முயன்றார். அப்போது நேராக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர் வாகனத்தின் மீது பலமாக மோதியது.

தனது இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்த இளைஞருக்கு தலையில் பலத்த அடிபட்டது. விபத்து நேர்ந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் அடிபட்ட இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். உடலில் அவ்வளவாகக் காயங்கள் ஏற்படாத நிலையிலும் தலையில் அடிபட்டதால் அந்த இளைஞர் மூளைச் சாவடைந்துள்ளார்.

இது குறித்த காணொளியை காண இங்கே அழுத்தவும்..

4599 total views