பள்ளிக்கட்டணம் செலுத்தாத பிஞ்சு குழந்தைகளை இந்த பள்ளி நிர்வாகம் என்ன செய்தது தெரியுமா?

Report
54Shares

மத்திய டெல்லியில் கவுகாசி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடத்தில் யூ.கே.ஜி. படிக்கும் மாணவிகள் பலர் ஜூன் மாதத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தாததால் அவர்களை பாதாள சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கு யூ.கே.ஜி. படிக்கும் 16 மாணவிகள் ஜூன் மாதத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இதனால் கோபம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் கட்டணம் செலுத்தாத மாணவிகளை மற்ற மாணவிகளிடம் இருந்து தனியாக பிரித்தனர்.

பின்னர் அவர்களை பள்ளியில் உள்ள பாதாள அறையில் அடைத்து வைத்தனர். சுமார் 5 மணி நேரம் அந்த அறையிலேயே அவர்கள் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கு சாப்பாடு, தண்ணீர் எதுவும் வழங்கப்படவில்லை.

பாதாள அறையில் அடைத்து வைத்திருந்ததால் பீதியில் அந்த மாணவிகள் அழுதபடி இருந்தனர். மாலையில் குழந்தைகளை அழைத்து செல்வதற்காக அவர்களுடைய பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர்.

அப்போது வழக்கமாக இருக்கும் இடத்தில் தங்களது குழந்தைகளை காணவில்லை. இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்த போது, கல்வி கட்டணம் செலுத்தாததால் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

குழந்தைகள் பாதாள அறையில் அடைக்கப்பட்ட காட்சிகளும் பரவியதையடுத்து பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து குழந்தைகள் பரிதவிப்பான நிலையில் இருந்ததை பார்த்ததும் கண் கலங்கினார்கள். பள்ளி நிர்வாகத்தினரிடம் சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் மீது சட்ட விரோதமாக அடைத்து வைத்தல், குழந்தைகளை கொடுமைப்படுத்துதல் ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2650 total views