35 வருடங்களுக்கு பிறகு தாயுடன் இணைந்த மகள்....மிகவு்ம் சுவாரசியமான கதை இவர்களுடையது!...

Report
88Shares

சென்னையில் ஆதரவற்றோர் இல்லத்தில் வேலை செய்து வந்த பெண் ஒருவர்,35 வருடங்களுக்கு பிறகு தனது தாயுடன் இணைந்துள்ளார்.

கர்நாடகாவை சொந்த ஊராக கொண்டவர்கள் சோனியாவின்பெற்றோர். அறிவுத்திறன் குறைப்பாட்டால் அவதிப்பட்டு வந்த இவர்கள், தங்கள் இரு குழந்தைகளை பார்த்துக்கொள்ள மும்பையில் உள்ள தாத்தா மற்றும் பாட்டியிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆனால் சிறிது காலத்தில் சோனியாவின் தாத்தா மற்றும் பாட்டி மரணமடைந்தனர். இதனால் சோனியா மற்றும் அவரது தம்பியை அவர்களது மாமா பார்துகொண்டார். சில நாட்களுக்கு மட்டுமே அவரால் இருவரையும் பார்த்துகொள்ள முடிந்தது. பின்னர் சோனியா மற்றும் அவரது தம்பி இருவரும் சென்னையில் உள்ள பானியன் என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ந்தனர்.

இந்த ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் வயதானவர்கள் மற்றும் நோயாளிகளை சோனியா பராமரித்து வந்தார். மேலும் சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்துவந்தார்.

இந்த நிலையில்தான் எப்படியாது தனது தாய்யை பார்க்க வேண்டும் என்று சோனியா பல முயற்சிகள் எடுத்துள்ளார். அவருக்கு உதவியாக டாக்டர் சாந்தாவும் அவரது தாய்யை தேடியுள்ளார்.

இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மந்திராலயத்தில் வயதான பெண்பிரசாதம் கொடுக்கும் கவுண்டரில் இருந்துள்ளார். அவர் பார்ப்பதற்குசோனியாவின் தாய் போல இருந்துள்ளதால், அவரிடம் சோனியா மற்றும் மருத்துவர் சாந்தா பேசியுள்ளனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே அவர் சோனியாவின் தாய்தான். தற்போது சோனியா மற்றும் அவரது தம்பி இருவரும், 35 வருடங்களுக்கு பிறகு தாயுடன் இணைந்துள்ளனர்.

3882 total views