உங்க பான் கார்டு ஆக்டிவேட்ல இருக்கா இல்லையான்னு எப்படி தெரிஞ்சிக்கலாம்?

Report
44Shares

நாடு முழுவதும் 11,44,211 லட்சம் போலி பான் கார்டு எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கேங்க்வார் தெரிவித்திருந்தார்.

ஒருவர் ஒரு பான் கார்டு மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது தான் விதி. அதை மீறி போலியாக ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் வைத்திருந்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கலாம் என்று வருமான வரி சட்டம்-1961, 272 பிரிவு-பி குறிப்பிடுகிறது.

ஒரு நபரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டு இருந்தால் அதனை உடனடியாக சரண்டர் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் உங்கள் பான் கார்டு ஆதார் அட்டையுன் உடனடியாக இணைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், போலி பான் கார்டுகள் என எப்படி வரையறுத்து டீ- ஆக்டிவேட் செய்திருக்கிறார்கள் என்பது பலருக்கும் புரியாததால், உங்கள் பான் எண் பயன்பாட்டில் உள்ளதா? அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளதா? என்பதை பின்வரும் முறையில் தெரிந்து கொள்ளலாம்.

என்ற இந்திய அரசின் இணையப்பக்கத்தில் இதனை அறிந்து கொள்ளலாம்.

இதில் முதல் பக்கத்தில் உங்களின் குடும்பப் பெயர் (Surname), பெயர், பிறந்த நாள், மொபைல் எண் ஆகிய தகவல்களை கொடுக்க வேண்டும்.

தகவல்களைக் கொடுத்ததும் Submit செய்தால் OTP எண் உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும்.

அடுத்ததாக, அந்த OTP எண்ணை அதில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.

தற்போது ஒரு புதிய பக்கம் திறக்கப்படும், அதில் உங்களுடைய பான் கார்டு எண், அதிகார எல்லை மற்றும் செயல்பாட்டில் உள்ளதா, இல்லையா என்ற தகவல்கள் விரிவாக இடம் பெற்றிருக்கும்.

2044 total views