உயிரிழந்த தாயின் சடலத்தை இருசக்கர வண்டியில் கட்டி எடுத்துச் சென்ற மகன்..! வைத்தியசாலை நிறுவாகத்தினால் தொடரும் அவலம்?

Report
123Shares

மத்தியபிரதேச மாநிலத்தில் மருத்துவமனை நிர்வாகம் அமரர் ஊர்தி வழங்காததால், தாயின் சடலத்தை இளைஞர் ஒருவர் பிரேத பரிசோதனை கூடத்துக்கு இருசக்கர வாகனத்தில் கட்டி எடுத்துச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மஸ்தாபூர் கிராமத்தை சேர்ந்த ஒருவரை பாம்பு கடித்துள்ளது.

மோகங்கார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அமரர் ஊர்தி வழங்காததால், சடலத்தை அவரது மகன் இருசக்கர வாகனத்தில் பிரேத பரிசோதனை மையத்துக்கு எடுத்து சென்றார். இதுகுறித்த காணொளி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

5302 total views