தற்கொலை செய்து கொண்ட அண்ணன்... பாசத்தால் தங்கைக்கு நிகழ்ந்த சோகம்! கலங்க வைக்கும் சம்பவம்

Report
225Shares

குடிக்கு அடிமையாகி அலுவலகத்திற்கு சரியாக செல்லாத காரணத்தினால் அரசாங்க வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட நபர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துள்ளார். இவரது இறப்பு செய்தியைக் கேட்ட தங்கையும் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.

இந்திய மாநிலமான தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி இவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது தங்கை கற்பகவல்லி கணவருடன் பக்கத்து ஊரில் வசித்து வருகிறார்.

குடிக்கு அடிமையான இவர் வேலைக்குச் சரியாக செல்லாத காரணத்தில் வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனக்கஷ்டத்தில் இருந்து வந்த திருப்பதி வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டர்.

இதுகுறித்து தகவல் கிடைத்த பொலிசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையில், பக்கத்து ஊரில் வசித்து வந்த சகோதரி கற்பகவல்லிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அண்ணன் இறந்த தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்த கற்பகவல்லி, அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்துள்ளார்.

அவரது உறவினர்கள், கற்பகவல்லியை தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். ஆனால், ஏற்கெனவே கற்பகவல்லி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

அண்ணன் இறந்த செய்தி கேட்டவுடன் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு கற்பகவல்லி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பதி, அனைவரிடமும் அன்பாகவும் பாசத்துடனும் பழகுவார் என்றும், தனது தங்கைகளிடமும் எப்போதும் பாசத்துடன் இருப்பார் என்றும் உறவினர்கள் கூறினர்.

அண்ணனின் இறப்புச் செய்தி கேட்ட அதிர்ச்சியில் அவரது தங்கை கற்பகவல்லியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

7803 total views