அனைவரையும் முகம் சுழிக்க வைத்து....தந்தையின் பெயரை அசிங்கப்படுத்திய ஷாரிக்...புலம்பும் பொன்னம்பலம்!...

Report
533Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொன்னம்பலத்திடம் ஷாரிக் அளித்த பதில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகா ஆகியோர் படுத்திருக்கும் படுக்கையறையில் மஹத் மற்றும் ஷாரிக் ஆகியோர் இருந்த விவகாரம்தான் தற்போது ஹைலைட்டாக இருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் போட்டியாளர்களிடம் பேசிய கமல்ஹாசனும் இதை கண்டித்தார்.

இதையடுத்து ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் பொன்னம்பலத்திடம் சண்டை போடும் புரோமோ வீடியோக்கள் வெளியானது. இந்த விவகாரம் பிக்பாஸ் வீட்டில் பெரும் பஞ்சாயத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது தொடர்பாக ஷாரிக்கிடம் பேசும் பொன்னம்பலம் “நீ இந்த வீட்டிற்குள் வந்த போது என்னை உன் தந்தையுடன் ஒப்பிட்டு பேசினாய். உன்னுடைய அப்பா அருகில் இருந்திருந்தால், நீ இப்படித்தான் நடந்து கொண்டிருப்பாயா?” எனக் கேட்டார்.

அதற்கு பதிலளித்த ஷாரிக், என் அப்பா இங்க இருந்தால் கூட கம்முனு இருந்திருப்பார். இதில் தலையிட மாட்டார் எனக்கூறி பொன்னம்பலத்தை அதிர்ச்சியடைய செய்தார்.

சரி விடுப்பா உன் அப்பாகிட்டயே நான் கேட்டுக்குறேன். எனக்கு அவர் ரொம்ப வருட பழக்கம் எனக்கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் பொன்னம்பலம். ஷாரிக்கின் இந்த நடவடிக்கை பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

18448 total views