மகளை ஆற்றில் வீசிவிட்டு தோழியுடன் தாய் தற்கொலை.... இதுதான் காரணமாம்!

Report
138Shares

குஜராத்தில் ஓரினச்சேர்க்கைக்கு அக்கம்பக்கத்தார் எதிர்ப்பு தெரிவித்ததால், இரண்டு பெண்கள் மூன்று வயது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் குஜராத் மாநிலம் ஆமதாபாத், பாவ்லா பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான ஆஷா தாகூர். இவர் தன்னுடன் பணியாற்றிய 28 வயது பாவ்னா தாகூர் என்ற பெண்ணுடன் ஓரினத் தொடர்பு வைத்திருந்துள்ளார். இதனால் கணவர் இல்லாத நேரங்களில் அப்பெண்ணை அவர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இது குறித்து தெரியவந்ததால், அக்கம்பக்கத்தார் அப்பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அப்பெண்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆஷா, தனது மூன்று வயது மகளுடன் தோழியை அழைத்துக் கொண்டு சபர்மதி ஆற்றுக்குச் சென்றுள்ளார். அங்கு தனது மகளை ஆற்றில் வீசிக் கொலை செய்த அப்பெண், பின்னர் தனது தோழியுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார், ஆற்றில் மூழ்கிய மூவரின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பெண்கள் ஆற்றில் குதித்த இடத்தில் அவர்கள் எழுதிய கடைசிக் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், 'எங்களை யாரும் சேர்ந்து வாழவிடவில்லை. அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம். அடுத்தப் பிறவியில் மீண்டும் சந்திப்போம்’ என எழுதப்பட்டிருந்தது.

7029 total views