மகனின் உடலை அடையாளம் காட்ட வந்த பெற்றோர்.. மருத்துவமனையிலேயே உயிரிழந்த சோகம்

Report
3026Shares

நாமக்கல் மாவட்டத்தில் சக்திவேல் என்பவரது மகனான நிஷாந்த் தனது நண்பரான கிருபாகரனுடன் கோவையிலிருந்து நாமக்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

கோவை தேசிய நெடுஞ்சாலையில் அவினாசி வந்த போது அருகே சென்ற ஆட்டோவில் இருந்து பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரம் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது. அப்பொழுது அங்கு வந்த நிஷாந்தின் இருசக்கர வாகனம் இயந்திரத்தின் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகினர். உயிரிழந்த நிஷாந்தின் உடல் அவினாசி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நிஷாந்தின் உடலை அடையாளம் காட்டுவதற்காக மருத்துவமனைக்கு வந்த அவரது பெற்றோர்கள் துக்கம் தாங்காமல் மருத்துவமனை வளாகத்திலேயே குளிர்பானத்தில் விஷம் கலந்து தற்கொலை கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

97361 total views