ஏர்டெல்லும் துண்டிக்கப்படுமா? வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம்...

Report
88Shares

அன்மையில் ஏர்செல் டவர்கள் செயலிழந்ததால் நாடு முழுவதும் உள்ள 30 லட்சம் பேர் ஏர்டெல்லுக்கு மாறினர்.

அதிக வாடிக்கையாளார்களை தனியார் நிறுவனமான ஏர்டெல்லுக்கு மத்திய அரசின் பொதுதுறை நிறுவனமான BSNL செக் வைத்துள்ளது. ஒரு நிறுவனத்தின் சிம்கார்டில் இருந்து மற்றொரு நிறுவன சிம்கார்டிற்க்கு தொடர்ப்பு கொண்டால் தடையற்ற சேவை வழங்க சம்பந்தபட்ட நிறுவனம் ”பாய்ண்ட் ஆப் இண்டர்கணெக்ட்” பயன்படுத்துவது வழக்கம்.

சிக்கல்

இதுவரை ஏர்டெல்லுக்கு தடையற்ற சேவைக்கான ”பாய்ண்ட் ஆப் இண்டர்கணெக்ட்” வழங்கி வந்த BSNL தற்போது வழங்கவில்லை என கூறப்படுகிறது. ஏர்டெல் 30 லட்சம் வாடிக்கையாளர்களை கூடுதலாக அதிகரித்ததும், அதற்குரிய கட்டணத்தை பெற்றுக்கொண்ட BSNL அதிகரிக்க வேண்டிய பாய்ண்ட் ஆப் இண்டர்கணெக்டை அதிகப்படுத்தாமல் விட்டுவிட்டது. இதனால் தற்போது ஏர்டெல் வாடிக்கையளர்களுக்கு தடையற்ற சேவை வழங்க இயலாமல் தவித்துவருகிறது.

வாடிக்கையாளர்களின் பாதிப்பு

இதனால்தான் ஏர்டெல்லில் இருந்து BSNL எண்ணை தொடர்பு கொண்டால் தொடர்ப்பு கொண்டவரின் குரலே அவருக்கு எதிரொலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏர்டெல் எண்ணில் இருந்து தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தடையற்ற சேவையை வழங்க இயலாத BSNL மீது ஏர்டெல் இதுவரை சட்டபூர்வ நடவடிக்கை எதுவும் மேற்கொண்டதாக தெரியவில்லை.

BSNL நிறுவனம் பாய்ண்ட் ஆப் இண்டர்கணெக்டை அதிகபடுத்தினால் மட்டுமே தடையற்ற சேவை மக்கள் பெறமுடியும்.

2953 total views