ஜூஸில் ஐஸ் பத்தலை....கடை ஊழியரை கண்ணா பின்னாவென தாக்கிய மாணவர்கள்!...

Report
94Shares

சென்னை நந்தனத்தில் ஜூஸில் ஐஸ் குறைவாக இருந்ததால் ஆத்திரமடைந்து கல்லுரி மாணவர்கள் கடை ஊழியர்களைத் தாக்கினர்.

நேற்றிரவு 12 மணியளவில் நந்தனத்திலுள்ள லஸ்ஸி ஷாப் என்ற ஜூஸ் கடையில், கல்லூரி மாணவர்களான ஜெகதீஷ் மற்றும் தனுஷ் ஆகியோர் ஜூஸ் குடித்துள்ளனர்.

ஜெகதீஷ் ஜூஸில் ஐஸ் குறைவாக உள்ளதாக கடை ஊழியரிடம் தெரிவித்தபோது வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியது. ஜூஸை ஊழியரின் முகத்தில் ஊற்றிய ஜெகதீஷ், தன்னுடைய மற்ற நண்பர்களை வரவழைத்து கடை ஊழியர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சைதாப்பேட்டை காவலர்கள் இதைக் கவனித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் நாள்வரும்

ராயப்பேட்டை நியூ கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. இந்த தாக்குதல் தொடர்பாக கடை உரிமையாளர் அஹமத் அலி சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

3100 total views