10ம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்த மகன்: இனிப்பு வழங்கி கொண்டாடிய தந்தை...

Report
163Shares

மத்திய பிரதேச மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மகன் தோல்வி அடைந்ததால் அவரது தந்தை இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் சாகர் என்ற பகுதியை சேர்ந்த, சுரேந்திரா என்பவரின் மகன், 10ம் வகுப்பு பொதுதேர்வில் தோல்வி அடைந்தான். இதை கேள்விப்பட்ட சுரேந்திரா இனிப்புகள் வாங்கி சொந்தக்காரர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு வழங்கியதோடு, மேள தாளங்களை வரவழைத்து, அப்பகுதியில் நடனமாடியபடி ஊர்வலம் சென்று தன் மகனின் தோல்வியை கொண்டாடியுள்ளார்.

இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். முதலில் அதிர்ச்சி அடைந்த சுரேந்திராவின் மகன், பின்னர் மெல்ல கொண்டாட்டங்களில் இணைந்து கொண்டான்.

'மகனின் தோல்வியை ஏன் கொண்டாடுகிறீர்கள்' என, பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, தேர்வில் தோல்வி அடைந்தால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக மாணவர்கள் நினைக்கின்றனர் அது தவறு. ஒரு பாதை மூடிவிட்டால் வேறு பாதைகள் திறக்கும் என்பது அவர்களுக்கு புரிய வேண்டும். இதற்காக மனமுடைந்து தவறான முடிவுகளை தேடிச் செல்லக் கூடாது. எனவே, அந்த மனநிலையை மாற்றவே, இதை கொண்டாடுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இப்படி பெற்றோர்கள் மாணவர்களை புரிந்துக்கொண்டால் தேர்வு தோல்வியால் ஏற்படும் தற்கொலைகளை தவிர்க்கமுடியும். இதற்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டாக சுரேந்திரா செயல்பட்டுள்ளார்.

6995 total views