இதற்காக தான் ஆசிஃபாவை துடிக்க துடிக்க கொன்றேன்! குற்றவாளியின் “பகிர் ” வாக்குமூலம்

Report
3239Shares

ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கிய ஒரு விடயம் என்றால் அது சிறுமி ஆசிஃபா படுகொலை செய்யப்பட்டது தான்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ஆசிஃபா என்ற 8 ‌வயதுச் சிறுமி கடந்த ஜனவரி 10ஆம் திகதி காணாமல் போனார். ஒரு வாரத்திற்குப் பிறகு ராஸன்னா வனப்பகுதியில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சிறுமியை ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து வழிபாட்டுத்தலம் ஒன்றில், மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது கண்டுப் பிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கு இந்திய அளவில் கண்டனக் குரல்கள் எழுந்தன. பலரும் சமூக வலைத்தளங்களில் ஆசிஃபாக்கு நீதி வேண்டும் என பதிவிட்டனர்.

இந்நிலையில், ஆசிஃபா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முக்கியக் குற்றவாளியின் வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது.

இவ்வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி கூறுகையில், முஸ்லிம் சமுதாய மக்களை மிரட்டவே, சிறுமி ஆசிஃபாவை கடத்தி வந்து அடைத்து வைத்துள்ளார் சஞ்சி ராம்.

ஆனால், அச்சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதும், அந்த குற்றத்தில் தனது மகனுக்கும் தொடர்பிருப்பதை அறிந்த பிறகே, மகனைக் காப்பாற்ற சிறுமியைக் கொலை செய்ய முடிவெடுத்ததாக விசாரணையின் போது கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

கதுவா சிறுமி வழக்கில், சஞ்சி ராம், அவரது மகன் விஷால், மற்ற5 பேர் மற்றும் ஒரு சிறார் ஆகிய8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சிறுமி கடந்த 10ம் திகதி கடத்தப்பட்டுள்ளார். அன்றைய தினமே ராமின் உறவுக்கார பையனான சிறார் குற்றவாளி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

சிறுமி 10ம் திகதி கடத்தி வரப்பட்ட நிலையில், 13ம் திகதி தான் அவர் பலாத்காரத்துக்கு உள்ளான விடயம் தனக்கு தெரிய வந்ததாகவும், உறவுக்கார பையன் தான் அதனை ஒப்புக் கொண்டதாகவும் சஞ்சி ராம் கூறியுள்ளார்.

இந்த பலாத்காரத்தில் தனது மகனுக்கும் தொடர்பிருப்பதால், அவனைக்காப்பாற்றவே அசிபியாவைகொலை செய்ய முடிவெடுத்ததாகவும், முஸ்லிம் பக்கர்வால் மக்களை மிரட்டநினைத்த தனது திட்டமும் இதன் மூலம் நிறைவேறும் என்று கூறியுள்ளார்.

ஜனவரி 14ம் திகதி சிறுமியைக் கொலை செய்து, எந்த தடயமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் நினைத்துள்ளார்.

ஆனால், அவர் நினைத்தபடி திட்டம் நிறைவேறவில்லை. பிறகுதான், ஒரு வாகனத்தில் ஏற்றி கதுவா சிறுமியின் உடல் ஹிராநகர் கால்வாய்க்கு அருகே வீசப்பட்டுள்ளது. இந்த கடத்தலுக்கானதிட்டம் ஜனவரி 7ம் திகதியே தீட்டப்பட்டு, அதற்கான போதைப் பொருட்களும் வாங்கிவைக்கப்பட்டுள்ளது.

கதுவா சிறுமியை காவல்துறையினர்தீவிரமாக தேடி வந்த போது, தனது மகன் பிடிபட்டு விடக் கூடாது என்பதற்காக, சிறார் குற்றவாளியை, குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படியும், விரைவில்அவரை விடுதலை செய்ய வைப்பதாகவும் சஞ்ஜி ராம் கூறியுள்ளார். இதையடுத்தே அச்சிறுவன்குற்றத்தை காவல்நிலையத்தில் சென்று ஒப்புக் கொண்டுள்ளா

126951 total views