அடுத்த வீட்டிற்கு வாழப் போகும் பெண்களை இப்படியா காட்டுவது - விவேக்!

Report
266Shares

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி பற்றி தனது கருத்தை மிகவும் காட்டமாக டிவிட்டரில் பாடலாசிரியர் விவேக் பதிவிட்டள்ளார்.

16 பெண்கள் ஆர்யாவை மணக்கும் கனவோடு எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தற்போது அகாதா, சுசானா, சீதாலட்சுமி ஆகிய 3 பெண்கள் மட்டுமே போட்டியில் உள்ளனர். இதில் ஒருவர் தான் ஆர்யாவை மணக்கப் போகிறார்.

அடுத்த வீட்டிற்கு வாழப் போகும் பெண்கள் இப்படி யாரோ ஒரு ஆர்யாவை மனதில் நினைத்து அவரை அடைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை பார்த்து பலரும் முகம் சுளித்துள்ளனர்.

ஆர்யாவும் அந்த பெண்களை ஏதோ தன் காதலன் போன்று கட்டிப்பிடிப்பதும், நெருங்கிப் பழகுவதுமாக உள்ளார். இதை எல்லாம் பார்க்கும் மக்கள் அந்த பெண்களின் குடும்பத்தாரை தான் விளாசுகிறார்கள். டிவிக்காரங்க கூப்பிட்டால் வயசுப் பொண்ணுங்களை அனுப்பிவிடுவதா என்று விமர்சிக்கிறார்கள்.

எங்க வீட்டு மாப்பிள்ளை, 8 வயது சிறுமி கூட பலாத்காரம் செய்யப்படும் நேரத்தில் பெண்களை இப்படி மோசமாக காட்டுவது கொடுமை. ஆர்யாவை திருமணம் செய்வதற்காக தான் பிறந்தது போன்று காட்டியுள்ளனர்.

நம் தமிழ் பெண்களுக்கு அதிக கண்ணியம் உள்ளது. அவர்களை இப்படி காட்டுவதை நிறுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார் பாடலாசிரியர் விவேக்.

8968 total views