7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 65 வயது முதியவர் கைது!

Report
264Shares

விருதுநகரில் 65 வயது முதியவர் ஒருவர் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சிறுமிகள் பெருமளவில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை, ஒடிசாவில் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை, உத்தரபிரதேசத்தில் இளம் பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவமும் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் விருதுநகர் பர்மா காலணியை சேர்ந்த 7 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டொருக்கும் போது, அதே தெருவை சேர்ந்த 65 வயது முதியவர், சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி, தன் வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் முதியவரை கைது செய்துள்ள போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

9408 total views