மீண்டும் ஒரு அவலம்... அழுகிய நிலையில் 9 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு

Report
269Shares

ஹரியானாவில் 9வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் வாய்க்காலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கத்துவா மற்றும் உன்னோவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டை உலுக்கி வரும் நிலையில் ஹரியானாவில் ஒரு சிறுமியின் உடல் வாய்க்காலின் அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் திடௌலி என்ற கிராமத்தில் உள்ள ஒரு வாய்க்காலுக்கு அருகில் பை கிடந்துள்ளது. இதனை அப்பகுதியில் உள்ள நாய்கள் குதறிக்கொண்டிருந்தது. இதனைக் கண்ட கிராம மக்கள் நாய்களை விரட்டி விட்டு பையில் என்ன இருக்கிறது என அருகில் சென்று பார்த்துள்ளனர். குழந்தையின் உடல் அழுகிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது

இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில், 9வயது மதிக்கத்தக்க சிறுமி போல் தெரிகிறது. உடல் அழுகிய நிலையில் இருப்பதால் ஒரு வாரத்திற்கு மேலாக இருக்கலாம் எனத் தெரிகிறது. பிரேத பரிசோதனைக்கு அறிக்கைக்கு வந்த பிறகு மேற்கொண்டு விவரங்கள் தெரியவரும் என கூறியுள்ளனர்.

8468 total views