சிறுவனின் உயிரை பறித்த வணிக வளாகம் - இப்படியுமா நடக்கும்?

Report
173Shares

எஸ்கலேட்டரில் பேக் சிக்கி 2-வது தளத்தில் இருந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி எக்ஸ்பிரஸ் அவென்யூ நிர்வாகத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நகரும் படிக்கட்டுகளில் பயணிக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன என்பதையும் தற்போது காணலாம்.

சென்னை கொருக்குப்பேட்டை, டிரைவர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார். இவர் தனது 22 வயதான மூத்த மகளுடன் 10 வயதான மகன் நவீன் கண்ணாவை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ ஷாப்பிங் மாலுக்கு கடந்த செவ்வாய் அன்று அனுப்பியதாகக் கூறியுள்ளார்.

அப்போது, 2-ம் தளத்தில் நின்றிருந்த சிறுவன் நவீனின் பேக் எஸ்கலேட்டர் எனும் நகரும் படிக்கட்டு கைப்பிடிப் பட்டையில் மாட்டி இழுத்து, அவரை கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது.

இதில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் ஆர்வமுடன் வந்து செல்லும் ஷாப்பிங் மாலில் செக்யூரிட்டி சேஃபிடி மேனேஜர்-ன் அலட்சியத்தால், அங்கு பாதுகாப்புக்கு யாரும் அருகில் நிற்கவில்லை என சம்பந்தப்பட்ட எக்ஸ்பிரஸ் அவென்யூ ஷாப்பிங் மால் நிர்வாகத்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்பவர்கள், விபரீதம் குறித்து பெரும்பாலும் அறிந்திருந்தாலும், அஜாக்கிரதையால் சில விபத்துக்களும், அறியாமையால் சில விபத்துக்களும் நேரிடுகின்றன. குழந்தைகளை நகரும் படிக்கட்டில் அழைத்துச் செல்லும் போது பெற்றோர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நகரும் படிக்கட்டின் கைப்பிடியின் பட்டை மேல் நோக்கி நகரும் இடத்தில் அதன் மீது உடல் எடை முழுவதையும் செலுத்தி சாய்ந்தபடி நிற்கக் கூடாது. அத்துடன் குழந்தைகளை அந்த ஆபத்தான இடத்தில் தனியாகவோ விடக் கூடாது.

விபத்து நேரிடும் என அறியும் சமயத்தில் எஸ்கலேட்டர் அருகே உள்ள எமர்ஜென்ஸி ஸ்டாப் பட்டனை அழுத்தி படிக்கட்டு நகரும் இயக்கத்தை நிறுத்த வேண்டும். எமர்ஜென்ஸி ஸ்டாப் பட்டன் இருக்கும் இடம் வெளிப்படையாக கண்ணில் படும்படி அமைக்கப்பட வேண்டும்.

5661 total views