காதலுக்காக தோழியை கொலை செய்த பெண்...அம்புட்டு லவ்வா?

Report
697Shares

சென்னையில் தனது காதலுக்கு இடையூறாக இருந்த தோழியை கொலை செய்துள்ள பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டியை சேர்ந்த ஜெகதீஸ்வரி, திவ்யா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள். இவர்கள் இருவரும் நர்ஸிங் பயிற்சி படித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜயராஜ் என்பவர் சிகிச்சை பெறுவதற்காக இவர்கள் பயிற்சி பெற்ற மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது, அவர்கள் இருவரும் விஜயராஜிடம் நெருங்கி பழகியுள்ளனர்.

நாளடைவில் இவர்கள் இருவருமே விஜயராஜை காதலிக்க தொடங்கியுள்ளனர். இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது.

இதில், ஜெகதீஸ்வரி தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் தோழி என்றும் பார்க்காமல் திவ்யாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி தனது நண்பர் மோகன் என்பவரின் உதவியுடன் திவ்யாவை கொலை செய்து கெடிலம் ஆற்றில் புதைத்துள்ளார்.

இதற்கிடையில் திவ்யாவை காணவில்லை என்று அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் அவரது தோழியான ஜெகதீஸ்வரியிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின் முரனாக பதில் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில், மேற்கூறிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

தற்போது ஜெகதீஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார்.

26240 total views