திரைப்பட பாணியில் இறந்தவருக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை.. அதிர்ச்சி சம்பவம்

Report
663Shares

தமிழ்நாட்டில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேகர் என்பவர் உடல்நிலை பாதிப்பால் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மார்ச் 11ம் திகதி இரவு 7.45 க்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சேகரின் மனைவி அங்கிருந்த செவிலியரிடம் கூறியுள்ளார். அதற்கு ’நீ போ நாங்கள் வருவதற்குள் உன் கணவர் போய்விட மாட்டார்’ என அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.

இந்நிலையில் இரவு 11.30 மணிக்கு அங்கிருந்த சிலர் சேகரை தூக்கிச்சென்று அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதித்த போது சேகர் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. செவிலியரின் அலட்சியமே இதற்கு காரணம் என்று மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

எங்களை நம்ப வைப்பதற்காக சேகர் இன்னும் இறக்கவில்லை என்று கூறி ஐ.சி.யூ-வில் வைத்து சிகிச்சை பார்த்துள்ளனர். ரமணா படத்தில் டாக்டர் கூறியது போல ’உங்கள் கணவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்’ என கூறி அதிர்ச்சியை கொடுத்துள்ளார்கள். உரிய நேரத்தில் ஊழியர்கள் சிகிச்சை அளித்திருந்தால் என் கணவர் இறந்திருக்க மாட்டார்.

பண வசதி இல்லாமல்தான் பொதுமக்கள் அரசு மருத்துவமனையை நாடுகின்றனர். அங்கும் சரியான மருந்து, மாத்திரை, சிகிச்சை அளிக்கவில்லை என்றால் ஏழை மக்கள் என்னதான் செய்வார்கள். இது குறித்து சம்பந்தபட்ட அரசு மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.

25510 total views