போலி ஐடி அதிகாரி, ரவுடி பினு என அடுத்தடுத்து சென்னை போலீஸ் அதிரடி! தீபா வீட்டை தெரிக்க விட்டதன் பின்னணி என்ன..?

Report
159Shares

போலி ஐடி அதிகாரி, ரவுடி பினு என அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிட்டு சென்னை போலீஸ் அசத்தி வருகிறது.

கடந்த சனிக்கிழமை ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவின் வீட்டிற்கு வந்த நபர் தன்னை வருமான வரித்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் அதற்கான அடையாள அட்டையையும் அவர் காண்பித்தார். ஆனால் போலீஸ் விசாரிக்கவே சுவர் ஏறி குதித்து தப்பித்து ஓடினார் அந்த நபர்.

இந்நிலையில் நேற்று மாம்பலம் போலீஸில் சரணடைந்த அவர், தனது பெயர் பிரபாகரன் என்றும் தீபாவின் கணவர் மாதவன் தான் சினிமாவில் சான்ஸ் வாங்கி தருவதாக கூறி தன்னை இப்படி நடிக்க சொன்னதாக கூறினார். பிரபாகரன் வீடியோ தனக்கு ஐடி அதிகாரிக்கான அடையாள அட்டை மற்றும் சர்ச் வாரண்ட் ஆகியவற்றை முன்கூட்டியே கூரியர் செய்ததும் மாதவன் தான் என்றார் பிரபாகரன். மேலும் இப்போது நடிப்பது வெறும் ரிகர்சல்தான் என்றும் மாதவன் கூறியதாலேயே தான் அவ்வாறு நடித்ததாக, பிரபாகரன் வாக்குமூலம் அளித்தார். இந்த வீடியோவை நேற்று மீடியாக்களில் வெளியிட்டது சென்னை போலீஸ்.

இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி ரவுடி பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது 75 ரவுடிகளை லம்பாக தூக்கியது சென்னை போலீஸ். மேலும் இதில் தலைமறைவான பினு உள்ளிட்ட பல ரவுடிகளை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் பினுவை சுட்டுப்பிடிக்க உத்தரவிடப்பட்டதால் சென்னை அம்பத்தூர் காவல்நிலையத்தில் ரவுடி பினு சரணடைந்தார். பினுவின் வீடியோவையும் சென்னை போலீஸ் வெளியிட்டது.

அந்த காணொளியில் ரவுடி பினு, தான் ஒரு சுகர் பேஷன்ட் என்றும், தான் ஒன்றும் பெரிய ரவுடியெல்லாம் இல்லை என்றும் ரவுடி பினு கெஞ்சுகிறார்.

5493 total views