6 வயதில் தாயினால் பறிபோன கண்... 27 வயதில் தாயினாலே கிடைத்த நிகழ்வு!...

Report
1631Shares

இருபத்தோரு ஆண்டுகளுக்கு முன்பு தாய் செய்த தவறினால் பரிபோன மகனின் கண் தற்போது தாயினாலே திரும்ப கிடைத்துள்ள சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே சாருமூடு தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன்பிள்ளை. இவரது மனைவி ரமா தேவி. இவர்களுக்கு கோகுல்ராஜ்(27), ராகுல்ராஜ்(24) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

வீட்டில் பசுக்களை வளர்த்து வந்த ரமாதேவி கோகுல்ராஜிற்கு 6 வயதாக இருக்கும் போது வயலில் மேயவிட்டிருந்த பசுக்கைள வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஒரு பசு கயிறு இழுத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்த கோகுல்ராஜை நோக்கி ஓடியுள்ளது.

மகனை எங்கே பசு தாக்கிவிடுமோ என்று பயந்த தாய் சில கற்களை தூக்கி பசு மீது வீசியுள்ளார். அத்தருணத்தில் தவறுதலாக கோகுல்ராஜ் கண்ணில் பட்டு ஒரு கண்பார்வை பறிபோயுள்ளது.

வேறு கண் பொருத்தினால் பார்வை கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறியதையடுத்து, தனது கண்ணை மகன் வளர்ந்த பின்பு தானமாக கொடுக்கிறேன் என்று ரமாதேவி முடிவு செய்து கண் தானத்திற்கும் பதிவு செய்திருந்தார்.

ஆனால் தாயின் கண்ணை ஏற்க மறுத்துவிட்டார் மகன். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இளையமகன் ராகுல்ராஜுடன் ரமாதேவி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு லாரி மோதி தூக்கி வீசப்பட்டு ரமாதேவி படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து 2 கண்களும் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. ஒரு கண் கோகுல்ராஜிற்கு பொருத்த முடிவு செய்யப்பட்டதும், அதற்கு கோகுல்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். பின்பு நண்பர்கள், உறவினார்கள் வற்புறுத்தி சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தாயின் கண் கோகுல்ராஜிற்கு பொருத்தப்பட்டது. ஒரு கண் சீனியாரிட்டி அடிப்படையில் முன்பதிவு செய்துள்ள ஒருவருக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

52865 total views