ஷூவை நாக்கால் சுத்தம் செய்த வாலிபர் அவமானத்தில் தற்கொலை

Report
92Shares

மகாராஷ்டிரா மாநிலத்தில் 35 வயது நபர் ஒருவரை ஒரு கும்பல் முன்விரோதம் காரணமாக பொதுமக்கள் முன்னிலையில் தங்களுடைய ஷூவை நாக்கால் சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தின் அவமானம் தாங்காமல் அந்த நபர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் காசிம் ஷேக் என்பவரை அவரது முன்விரோதிகள் மார்க்கெட் பகுதியில் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவர்களில் ஒருவன் தனது ஷூவை நாக்கால் சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

பலர் முன்னிலையில் அவமானம் அடைந்த காசிம் ஷேக், பின்னர் வீடு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னர் அவர் விரிவாக கடிதம் எழுதி வைத்துள்ளதால், அவரது தற்கொலைக்கு காரணமான 4 பேரையும் மகாராஷ்டிரா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.

3678 total views