14வயதில் குடும்பத்தை பிரிந்தவர் 46 வருடங்கள் கழித்து ஒன்று சேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

Report
240Shares

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாலகிருஷ்ண்ன் என்பவரின் இராண்டாவது மகன் குணசேகரன். இவர் தன் 14ம் வயதில் 1971ஆம் ஆண்டு தன் குடும்ப வறுமை காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது சென்னை செண்டரல்லிருந்து குவகாத்தி செல்லும் ரயிலில் ஏறி அசாம் மாநிலத்திற்க்கு சென்றுள்ளார். பின் அங்கிருந்து நாகலாந்த் மாநிலத்திற்கு சென்ற சிறுவனான குணசேகரன் கூலிவேலை செய்து வந்தார்.

பின்னர் அங்கேயே தங்கிவிட்ட குணசேகரன் திருமணம் முடித்து குழந்தைகளுடன் நாகலாந்திலேயே வசித்து வந்தார். அப்போது நாகலாந்தில் பணியாற்றி வந்த சேலத்தை சேர்ந்த சந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டது. தன் வாழ்வில் நடந்ததை நண்பரிடம் பகிர்ந்துகொண்ட குணசேகரனை 2 மாத விடுமுறைக்கு தன்னுடன் தமிழகம் அழைத்துவந்துள்ளார் சந்திரன்.

46 வருடம் கழித்து சென்னை வந்த குண்சேகரனுக்கு வியாசர்பாடியில் தந்து வீட்டை கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் தன் தந்தையுடன் சிறுவயதில் டீ சாப்பிடும் டீகடை குண்சேகரனுக்கு நினைவு வந்துள்ளது. பின் அங்கு சென்ற அவருக்கு தற்போதும் அந்த டீகடை இயங்குவதை நினைத்து ஆச்சரியமடைந்தார். பின் அங்கிருந்தவர்களிடமிருந்து தன் குடும்ப உறுப்பினர்கள் பற்றி கூறி முகவரியை விசாரித்துள்ளார். அப்பொது ஒரு மூதாட்டி குணசேகரனை அடையாளம் கண்டுகொண்டு அவரது சகோதரம் மோகன் அங்குவசிப்பது பற்றி விவரம் கூறியுள்ளார்.

இதனைதொடர்ந்து சகோதரம் வீட்ற்கு சென்ற குணசேகரன் தன்னை பற்றி கூற அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் முழ்கினர். மேலும் அவரது தாய் தந்தை இறந்த செய்தியை கேட்டு கண்ணீர் விட்டு அழுத்துள்ளார். 46 வருடம் கழித்து தன்னை குடும்பத்துடன் சேர்ந்துவைத்த நண்பரான சந்திரனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

10830 total views