இந்த பொன்னு செய்யும் வேலையை பாருங்களேன்....ஷாக் ஆகிடுவிங்க

Report
222Shares

கடலூரில் மாணவி தனது தலை முடியில் கயிறை கட்டி 50 மீட்டர் தூரம் ஆம்னி வேனை இழுத்து சென்று சாதனை படைத்தார். மாணவியை ஆசிரிய மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.

கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் யூகிதா (வயது 11). கடலூர் மஞ்சகுப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த பள்ளியில் ஆண்டுவிழா நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட மாணவி யூகிதா தனது தலை முடியில் கயிறை கட்டி 50 மீட்டர் தூரம் ஆம்னி வேனை இழுத்து சென்று சாதனை படைத்தார். மாணவ-மாணவிகள் பலத்த கரகோ‌ஷம் எழுப்பி யூகிதாவை உற்சாகப்படுத்தினர். யூகிதாவை பள்ளி ஆசிரிய மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.

சாதனை படைத்தது குறித்து யூகிதா கூறியதாவது, நான் பள்ளியில் கராத்தே பயின்று வருகிறேன். விளையாட்டில் சாதனை செய்ய வேண்டும் என சின்ன வயதில் இருந்தே எனக்கு ஆசை ஏற்பட்டது.

பல்வேறு பயிற்சிகளை எடுத்து வந்தேன். தற்போது தலை முடியில் கயிறு கட்டி ஆம்னி வேனை இழுத்துள்ளேன். இதேப்போல் மேலும் பல சாதனைகளை செய்ய வேண்டும். கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள் ஆகும்.

8865 total views