மிஸ்டுகால் மூலம் வந்த வினை... ஆசை காதலனை அவதானித்த மாணவி என்ன ஆனார் தெரியுமா?

Report
1340Shares

பீகார் Mokama நகரை சேர்ந்தவர் சந்தீப் குமார் என்ற நபர் 16 வயது பள்ளி மாணவிக்கு பலமுறை மிஸ்டு கால் செய்துள்ளார். இதனையடுத்து மாணவி அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது சந்தீப் மாணவியிடம் நட்பாக பழகியுள்ளார்.

பின்னர் இவர்களது நட்பு தொடர்ந்து வந்த நிலையில் தனக்கு 20 வயது ஆகிறது என்றும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியள்ளார். அவ்வாறு திருமணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக அந்நபர் மாணவியிடம் மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன மாணவி சந்தீப்பை சந்திக்க ரயில் நிலையம் சென்று அவரை நேரில் பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். சந்தீபை பார்த்த போது தனது அப்பா வயது உடைய உங்களை திருமண செய்து கொள்ள முடியாது என அந்த மாணவி கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த சந்தீப் அந்த மாணவியை வற்புறுத்தி ரயிலில் ஏற்றியுள்ளார். இதனையடுத்து கழிவறைக்கு சென்ற மாணவி சந்தீப்பிற்கு தெரியாமல் தன் சகோதரிக்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார். ரயில் Bhagalpur நிலையத்தினை அடைந்த போது அங்கு காத்திருந்த பொலிசார் சந்தீப்பை கைது செய்துள்ளனர்.

46435 total views