ஹாசினியை தொடர்ந்து தாயை கொலை செய்து எஸ்கேப் ஆன தஷ்வந்த் கைது

Report
617Shares

சென்னையில் 7 வயது சிறுமி ஹாசினியை கொன்ற வழக்கில் ஜாமினில் வெளிவந்திருந்த குற்றவாளி தஷ்வந்த் நகைக்காக தாயைக் கொன்றுவிட்டு தலைமறைவானார். கடந்த 4 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் மும்பை போலீசாரிடம் தஷ்வந்த் சிக்கியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் மாங்காடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டிற்கு வெளியே விளையாடச் சென்ற 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றார்.

பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் பிணையில் வெளிவந்து தன்னுடைய தாயாரிடம் பணம் கேட்டு நச்சரித்து வந்ததாக தெரிகிறது. கடந்த சனிக்கிழமை வீட்டில் தஷ்வந்தும் அவருடைய தாய் சரளாவும் மட்டும் இருந்துள்ளனர். மாலையில் தஷ்வந்த் வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார், அவரது தந்தை வீடு திரும்பி பார்த்த போது சரளா தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

வீட்டில் பணம், நகையினை எடுத்துக் கொண்டு சென்ற தஷ்வந்தை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த முறையாவது சட்டம் தஷ்வந்திற்கு கடுமையான தண்டனை வழங்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

19059 total views