காதலிக்க மறுத்த பெண்... குடும்பத்துடன் தீயிட்டு கொளுத்திய காதலன்

Report
528Shares

சென்னை ஆதம்பாக்கம், சரஸ்வதி நகர், 7வது தெருவைச் சேர்ந்தவர் ரேணுகா. இவருக்கு மகள்கள் இந்துஜா,23 நிவேதா, 21. மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இவரது கணவர் கனடாவில் வேலை செய்து வருகிறார். திங்கட்கிழமையன்று நள்ளிரவில் இவரது வீட்டில் பலத்த சப்தமும் கூக்குரலும் கேட்டது.

இதில் இந்துஜா என்ற பெண்ணை ஆகாஷ் என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார். ஆனால் ஆகாஷின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை இந்துஜா.

பள்ளிப்பருவத்தில் இருந்து நண்பர்களாக இருந்த ஆகாஷ் தன்னை காதலிப்பது அறிந்த அப்பெண் அவரிடம் நட்பாக கூட பேசுதில்லை.

இதனால் விரக்தி அடைந்த இளைஞர் தன்னை காதலிக்க மறுத்த இந்துஜாவை குடும்பத்தோடு கொலை செய்யும் திட்டத்தோடு கையில் பெட்ரோலுடன் வந்து வாக்கு வாதம் செய்தார்.

ரேணுகா மறுத்து பேசி திட்டவே, கையில் இருந்த பெட்ரோலை வீடு முழுவதும் ஊற்றியதோடு ரேணுகா, இந்துஜா, நிவேதா மீதும் ஊற்றி லைட்டரை பயன்படுத்தி தீ வைத்துள்ளார்.

இதில் சம்பவ இடத்தில் இந்துஜா உயிரிழந்துள்ளார். அவரது அம்மாவும், தங்கையும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், உறவினர்கள் சில தகவல்களை கூறியுள்ளனர். வேளச்சேரியில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார் இந்துஜா.

இந்துஜாவை ஆகாஷ் ஒருதலையாக காதலித்து வந்தது வீட்டிற்கு தெரிந்தவுடன் இந்துஜாவை அவரது தாய் வேலையை விட்டு நிறுத்திவிட்டாராம்.

இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் நேற்று இந்துஜாவை கொலை செய்யும் நோக்கத்துடன் கையில் பெட்ரோல் கேனுடன் இந்துஜா வீட்டுக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து மூவரையும் தீ வைத்து எரித்துள்ளார் ஆகாஷ்.

தீவைத்த பின்னர் தப்பி ஓடி தலைமறைவாக இருந்த ஆகாஷை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். காதலிக்க மறுத்த இந்துஜாவை குடும்பத்தோடு பெட்ரோல் ஊற்றி எரித்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டே ஆகாஷ் வந்துள்ளது தெரியவந்துள்ளது.

16554 total views