பாகுபலியாக முயற்சி செய்த இளைஞர்: தூக்கி வீசிய யானை!

Report
254Shares

கேரளாவில் பாகுபலி போல சாகசம் செய்த இளைஞரை யானை தூக்கிய வீசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் பாகுபலி படத்தில் கதாநாயகன் யானையின் மீது ஏறுவது போல சாதனை செய்ய ஆசைப்பட்டுள்ளார். அதனால் முதலில் யானைக்கு அதிக பழங்களை கொடுத்து யானையை மயக்கியுள்ளார். அதன் பின்னர் யானைக்கு முத்தம் கொடுத்துவிட்டு தந்தத்தை பிடித்துக்கொண்டு மேலே என்ற முயற்சி செய்தார். தான் செய்யும் இந்த செயலை நண்பரின் உதவியோடு பேஸ்புக்கில் நேரலையில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அந்த சமயத்தில் அவர் ஏற முயற்சிக்கும்போது யானை திடீரென வேகமாக முட்டியது. இதில் அந்த இளைஞர் சிறிது தூரத்தில் போய் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அந்த இளைஞரை மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வீடியோவை இங்கே அழுத்தி பார்க்கவும்…

10490 total views