4 வருட உண்மைக் காதல்... காதலியை உயிருடன் தீ வைத்து கொளுத்திய காதலன்... நடந்தது என்ன?

Report
1196Shares

கோவை மாவட்டத்தில் நான்கு வருடமாக காதலித்து வந்த பெண்ணை காதலன் உயிருடன் தீவைத்து கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் நெகமம் அருகே செஞ்சேரிப்புதூரை பகுதியைச் சேர்ந்த கமலா(75) என்பவரது பேத்தி ஜான்சி பிரியாவும், அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் செல்வகுமார்(22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

தாய், தந்தையை இழந்த ஜான்சிபிரியாவினை பாட்டி கமலாவே வளர்த்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் இருவீட்டார்களுக்கு தெரியவர எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், நாம் இருவரும் எப்படியாவது ஒன்று சேர வேண்டும் என்று தனது பாட்டி ஆலயத்திற்கு சென்றுள்ள நேரம் ஜான்சிராணி, தனது காதலனுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

முதலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்துள்ளனர். அதற்கு ஜான்சிராணி பயமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து தீ வைத்து இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று செல்வகுமார் கூறி உள்ளார்.

முதலில் மண்எண்ணெயை ஊற்றி ஜான்சிபிரியா மீது தீவைப்பது என்றும், எரியும் தீயில் இருவரும் கட்டிப்பிடித்துக் கொள்ளலாம் எனவும் செல்வகுமார் கூறியுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளார் ஜான்சிபிரியா.

இதைத்தொடர்ந்து ஜான்சிபிரியா மீது செல்வகுமார் மண்எண்ணெயை ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார். இதில் கண் இமைக்கும் நேரத்தில் ஜான்சிபிரியாவின் உடலில் தீப்பற்றி மளமளவென்று பரவி எரிந்தது. இதனால் வலியால் அலறித்துடித்தபடி அவர், காதலனை நோக்கி ஓடிவந்தார். அதைப்பார்த்து பதறிப்போன செல்வகுமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதற்கிடையே தீ உடலில் பற்றியதால் அங்கும், இங்கும் ஓடி அலறிய ஜான்சிபிரியாவின் அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜான்சிபிரியா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்துள்ளார்.

காதலியை உயிருடன் எரித்துக் கொன்ற காதலனை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

38807 total views