இனியும் அமைதியாக இருந்தால் விபரீதமாகி விடும்: பாரதிராஜாவிடம் கண்ணீர் சிந்திய வைரமுத்து

Report
3121Shares

சின்மயி கூறியுள்ள பாலியல் புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இயக்குனர பாரதிராஜாவை வைரமுத்து சந்தித்து இது குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதோடு பல பெண்களிடம் வைரமுத்து தவறாக நடந்தார் என அவர்கள் கூறியதாக டுவிட்டரில் பாதிக்கப்பட்டவர்களின் பதிவை ஷேர் செய்தார்.

சின்மயி புகாருக்கு, காலம் பதில் சொல்லும் என வைரமுத்து டுவிட்டரில் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் பாரதிராஜாவை வைரமுத்து சந்தித்து சில மணிநேரங்கள் கண்ணீர் சிந்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்திப்பின் போது ஆண்டாள் விவகாரத்தை மனதில் வைத்து கொண்டு சிலர் தன்னை பழி வாங்கி கொண்டிருக்கிறார்கள் என வைரமுத்து, பாரதிராஜாவிடம் கூறினாராம்.

இனியும் அமைதி காத்தால் விபரீதமாகி விடும், நம் ஆட்களை ஒன்று திரட்டி உடனே ஏதாவது செய்யுங்கள். இல்லாவிட்டால் என்னை சினிமாவை விட்டே அப்புறப்படுத்திவிடுவார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது.

103914 total views