உங்க அயர்ன் பாக்ஸ் இப்படி இருக்கா? ஒரே நிமிடத்தில் பளிச்னு சுத்தம் செய்யலாம்? எப்படி தெரியுமா?

Report
653Shares

பொதுவாக எல்லோருடைய வீடுகளிலும் அயர்ன் பாக்ஸ் இருக்கும். சில சமயங்களில் அயர்ன் செய்கிற பொழுது, துணியை கருக விட்டுவிடுவோம்.

அந்த துணி என்னவோ வீணாகிவிட்டது என தூக்கி வீசிவிடுவோம். அந்த அயர்ன் பாக்ஸை திருப்பிப் பார்த்தால் கருப்பாக மாறியிருக்கும்.

நாளடைவில் அது மிக மோசமாகிவிடும். அதை எப்படி சுத்தம் செய்யலாம் என்ற கேள்வி எல்லோருக்குமே இருப்பது தான்.

ஆனால் எப்படி என்பது தான் தெரியாது. அயர்ன் பாக்சில் அடிப்பகுதியில் உள்ள நாம் துணியைத் தேய்க்கப் பயன்படுத்தும் பகுதியைத் தான் சோல் பிளேட் என்று அழைக்கப்படும். அதுதான் அந்த அடிப்பகுதியின் நிறத்தை மாற்றக் கூடாது. அது அப்படியே கறையாக நிரந்தரமாகத் தங்கி விடும்.

என்ன செய்யலாம்?

ஆனால் நீங்கள் இனிமேல் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. கடையில் வாங்கும் போது அயர்ன் பாக்ஸ் எப்படி இருந்ததோ அதேபோல உங்களுடைய கறை படிந்த அயர்ன் பாக்ஸை மாற்ற முடியும். அதற்கு தேவையான பொருள் உங்களிடம் எப்போதுமே இருக்கும். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.

உப்பு சிறிதளவு

உப்பு மட்டுமே போதும் உங்களுடைய அயர்ன் பாக்ஸை மீண்டும் புதிது போல மாற்றுவதற்கு. ஒரு டீ டவல் அல்லது வெள்ளை நிற டவலை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதை அயர்ன் செய்யும் டேபிளின் மீது போடுங்கள். அந்த டவலின் மேல் அப்படியே ஒரு கைப்பிடியளவு உப்பை எடுத்து பூப்போல தூவி விடுங்கள்.

ஸ்டீம் போடாமல் சாதாரணமாக உப்பு தூவிய டவல் மேல் அயர்ன் பாக்ஸை வைத்து அயர்ன் செய்யுங்கள். சில நிமிடங்கள் கழித்து சோல் பிளேட்டைத் திருப்பிப் பாருங்கள்.

உங்கள் அயர்ன் பாக்சின் அடிப்பகுதி கறைகள் நீங்கி, பளிச்சென சுத்தமாக புதிது போல மாறியிருக்கும்.