வீட்டில் பணக்கஷ்டம் பறந்து அதிர்ஷ்டம் கொட்ட வேண்டுமா? இதை மட்டும் செய்ங்க போதும்

Report
129Shares

வீட்டில் பணக்கஷ்டம் மற்றும் கடன் தொல்லைகளை நீங்குவதற்கு என்ன செய்யலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் என ஏதாவது ஒன்றினை காலையில் எழுந்ததும் பார்த்தால் செல்வ வளம் பெருகும்.
  • கிரகங்களில் செவ்வாயை வலுப்படுத்த கடுகு எண்ணெய் மிகவும் உதவும். கடன் கொடுத்தோ, வாங்கியோ அவதிப்படுவோர் கடுகு எண்ணெய்யில் உணவு சமைத்து சாப்பிட நன்மை உண்டாகும்.
  • சிறிது சர்க்கரை எடுத்து வீட்டு வாசல் வெளியே தூவினால், சிறு பூச்சிகள் மற்றும் எறும்புகளுக்கு உணவாகும். இவைகள் அவற்றை சாப்பிட உங்கள் கஷ்டங்கள் சிறிது சிறிதாக விலகுவதை கண்கூடாக தெரியும். இவற்றினை காலை வேலையில் குளித்து முடித்தவுடன் செய்யவும்.
  • புளிய மரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில், வியாபார இடத்தில், பண பெட்டியில் வைத்து வரவும்.
  • வெல்லத்தால் பாயாசம் செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்களின் கையால் பசுவிற்கு வழங்கி வரவும்.
  • வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் சன்னதியில் கொடுத்து வரவும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும்.
  • கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து வாங்கவும். அந்த மாவு வீட்டில் உள்ளவரை பண பிரச்சனைகள் குறைந்து இருப்பதை அனுபவத்தில் காணலாம்.
  • தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபடவும். வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்.

5139 total views