இந்த செடிகளின் வாசம் நம்மீது பட்டாலே அதிர்ஷ்டமாம்! உங்கள் வீட்டிலும் உடனே வாங்கி வைக்கவும்

Report
603Shares

இந்த பூமி பந்தில் பலவித உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றிருக்கும் பல்வேறு குணநலன்கள் உண்டு.

சில உயிரிகள் நன்மை தரும். சில உயிரிகள் தீங்கு ஏற்படுத்தும். இப்படி பல பல பண்புகள் ஒவ்வொன்றிருக்கும் உள்ளது.

அந்த வகையில் தாவரங்களும் அடங்கும். சில தாவரங்கள் ஏரளமான நன்மைகளை நமக்கு தரும்.

இவற்றில் சில செடிகள் நமக்கு உண்மையிலே அதிர்ஷடத்தை வாரி வழங்குகிறது.

அதுவும் இந்த செடிகளின் வாசம் நம்மீது பட்டாலே நமக்கு ஆயுள் கெட்டி தான். அப்படிப்பட்ட செடிகள் என்னென்ன என்பதை தான் இப்பதிவில் பார்க்க போகிறோம்.

பாம்பு கற்றாழை

ஆங்கிலத்தில் ஸ்நேக் பிளான்ட் என்று இதனை அழைப்பார்கள். பெரும்பாலும் இதை அழகாக்க தான் வளர்ப்பார்கள்.

ஆனால், இது ஒரு மூலிகை செடி என்பது பலருக்கும் தெரிவதில்லை. இந்த செடி உங்களை சுற்றி இருக்கும் நச்சு தன்மைகளை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. உதாரணத்திற்கு கார்பன் டை ஆக்சைடு, பார்மல் டீஹைட், பென்சீன், க்ளோரோஃபார்ம் போன்றவற்றை கூறலாம்.

மணி பிளான்ட்

இந்த செடியை வீட்டில் வைத்தால் பணம் வரும் என்பதாலே பலரும் வளர்க்கின்றனர். ஆனால், இதில் அதை காட்டிலும் பல நன்மைகள் உள்ளது. இந்த செடியை பற்றிய நாசா ஆய்வில் ஒரு உண்மை தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த செடியை வளர்ப்பதன் மூலமாக நுரையீரலுக்கு எந்த பிரச்சினையும் உண்டாகாது. காரணம் இவை காற்றை சுத்திகரித்து தருவதாலே.

அழுது அத்தி

பார்ப்பதற்கு சிறிய செடியாக இது காணப்படும். ஆரோக்கியமான உடலை தருவதற்கு இந்த வகை அத்தி செடி பயன்படும். இதை உங்களின் படுக்கை அறையில் வைத்தால் சுத்தமான சுவாசத்தை தரும். மேலும், இருக்கும் இடத்தின் தட்பவெப்பத்தை சமமாக வைக்கும்.

துளசி

இந்த செடியின் பெயரை கேட்டதுமே உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் இது இதன் அற்புத மகிமைகள். உண்மைதாங்க.துளசி செடியை வீட்டில் வைத்தால் புற்றுநோய், சர்க்கரை நோய், ஹார்மோன் குறைபாடுகள் போன்றவற்றை தடுக்கலாம். சிலர் இதனை வாஸ்துக்காகவும் வளர்ப்பது உண்டு.

சோற்று கற்றாழை

கற்றாழையின் மகத்துவம் நாம் நன்கு அறிந்தது தான். பார்க்க பயங்கர முட்களை கொண்டிருந்தாலும் இந்த செடியினால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இது சிறந்த மூலிகை செடியாகும். உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை ஏற்படும் நோய்களுக்கு மருந்தாகும்.

26482 total views