மதுரையை எரித்தது கண்ணகியா..! உண்மையில் என்ன நிகழ்ந்தது தெரியுமா? வீடியோ

Report
523Shares

பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டிலே பிறந்து பாண்டிய நாட்டிலே அரசியல் புரட்சி செய்து சேரநாட்டிலே தெய்வமாகிய கண்ணகி அம்பாள் மக்கள் மத்தியில் பத்தினித்தெய்வமாக என இன்றும் வழிபட்டு வருவதைக் காணலாம்.

ஈழத்துக் கடைசித் தமிழ் மன்னனின் தலைநகர் கண்டி என்பதுடன் அது கண்ணகி வழிபாட்டின் உறைவிடமுமாகும்.இன்று கண்டியில் நடைபெறும் பெரஹரா பத்தினித்தெய்வமாம் கண்ணகிக்கு எடுக்கப்பட்டவிழா ஆகும்.

மணிமேகலை சிந்தாமணி சிலப்பதிகாரம் வளையாபதி குண்டலகேசி ஆகிய ஜம்பெரும் காப்பியங்களுள் தமிழில் உருவான முதல் பெரும் காப்பியம் சிலப்பதிகாரமாகும். இதனை இளங்கோவடிகள் சிருஸ்ட்டித்திருந்தார்.

அதில், பெண்மைக்கே உண்டான அச்சம், அறிவு, தைரியம், பக்தி என அனைத்து அம்சங்களும் பொருந்திய கண்ணகி தன் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கும்போது எப்படி அல்லலுற்றாள், திசைமாறிய கணவன் மனம் திருந்தி வரும்போது எவ்வாறு அவனை ஏற்றுக்கொள்கிறாள், தவறான தீர்ப்பால் தன் கணவன் கொல்லப்பட்ட போது நாடாளும் மன்னனையே எவ்வாறு எதிர்கொண்டு தன் கணவன் குற்றமற்றவன் என நிரூபிக்கிறாள்,

தவறான தீர்ப்பை வழங்ச்ல்கிய மன்னனுக்கு என்ன தண்டனை வழங்குகிறாள் என்று படிப்போர் மனம் உருக படைத்திருப்பார்.

மாட்சிமை பொருந்திய ஒரு பெண்ணால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை கண்ணகி பாத்திரம் வழியே மிக அழகாக எடுத்துரைத்திருப்பார்.

இத்தகைய சிறப்புகளால்தான் கண்ணகி இன்றும் அனைவராலும் போற்றப்படுகிறார்.

சரி வாருங்கள் கண்ணகி உண்மையில் மதுரையை எரித்தாளா? என்பதை பார்க்கலாம்.

கோவலன் இறந்த செய்தியை கேட்ட கண்ணகி, தன் கணவருக்காக பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனிடம் வாதாடி ,கோவலன் குற்றமற்றவன் என்பதை நிருபித்துவிட்டு பின் கோபத்தில் மதுரையை எரித்தாள் என்பது தான் வரலாறு என்றாலும், ஒரு சிலர் அதை வேறு கோணத்தில் பார்க்கிறார்கள்.

கோவலன் வணிக குலத்தை சேர்த்தவன், அவன் கொல்லப்பட்ட செய்தியை அறிந்தவுடன், மதுரையில் உள்ள வணிகர்கள் கோபப்பட்டு, தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக சில இடங்களில் தீ வைத்தாகவும், அந்த செய்தி மதுரை முழுவதும் பரவியதாகவும், நாளிடைவில் அந்த செய்தி மருவி கண்ணகி மதுரையை எரித்தாள் என்று கூறப்படுகிறது.

17539 total views