மோடி அரசின் பின்னணியில் இருக்கும் மூன்று முக்கிய அரசியல் புள்ளியின் மரணம்! 13 நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது எப்படி?

Report
130Shares

தற்போதைய பிரதம மந்திரி நரேந்திர மோடி, குஜராத்தை சேர்ந்த முக்கிய அரசியல் வாதிகளில் ஒருவர் ஆவார். தொடர்ந்து நான்கு முறை குஜராத் மாநிலத் இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்று, குஜராத் அரசியல் வரலாற்றில் நீண்டகால முதல்வராக இருந்தவர் என்ற சாதனையைப் பெற்றார்.

மிகப்பெரிய அளவில் தொழில் வளர்ச்சி ஏற்படவேண்டும் என்பதில், அதிக ஆர்வம் கொண்டவராக விளங்கி வருகின்றார் என்பது மறுக்க முடியாத உண்மை.

இவரின் ஆட்சியில் மறக்க முடியாத மூன்று தலைவர்களை தமிழகம் இழந்து விட்டது. இந்த மூன்று தலைவர்களினதும் பின்னணியை சற்று ஆழ்ந்து நோக்க வேண்டிய தருணம் இது.

பாஜவின் மாபெரும் பிதாமகரும், 3 முறை பிரதமர் பதவியை வகித்தவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 94.

நீண்ட காலமாக உடல் நலம் குன்றிய நிலையில் வீட்டிலும், மருத்துவமனையிலுமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

இரண்டாவதாக மக்கள் இழந்தது 5 முறை தமிழக முதல்வராக வாடை சூடிய கருணாநிதியை. கடந்த மாதம் ஓகஸ்ட் 7ஆம் திகதி சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தார்.

இந்த சோகம் மக்களை விட்டு நீங்குவற்குள் இன்று 3 முறை பிரதமர் பதவியை வகித்த அடல் பிஹாரி வாஜ்பாயின் மரண செய்தி மக்களுக்கு சென்றடைந்துள்ளது.

இதேவேளை, மோடியின் ஆட்சியில் மறைந்த இன்னொரு அரசியல் புள்ளி மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இவரின் இழப்பும் பேரிழப்பாக இருந்தது.

இந்த பின்னணியில் வாஜ்பாய் கடந்து வந்த வரலாற்றை மீட்டுபார்க் வேண்டிய கட்டாயம் உள்ளது.

தோல்விகளை தகர்த்தெறிந்த நாயகனின் பின்னணி.....

வாஜ்பாய் அரசை 1998ஆம் ஆண்டு ஜெயலலிதா கவிழ்த்தார். இந்திய அரசியலில் மறக்க முடியாத பெரும் சம்பவமாக அது காணப்பட்டது. இதன் பின்னணியில் நடந்தது என்ன என்பதை வாஜ்பாயே சென்னையில் பிரசாரக் கூட்டத்தில் கூறியிருந்தார்.

கடந்த 1996ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து வாஜ்பாயை பிரதமராக பதவியேற்க அப்போதைய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா அழைத்தார்.

இதையடுத்து 10ஆவது பிரதமராக வாஜ்பாய் பதவியேற்றார். ஆனால் வாஜ்பாயால் பெரும்பான்மைக்குத் தேவையான பலத்தை திரட்ட முடியவில்லை.

இதனால் 13 நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து 1996 முதல் 1998ஆம் ஆண்டு இடையே இரு ஐக்கிய முன்னணி அரசுகள் அமைந்து அவையும் கவிழ்ந்தன. மக்களவைக்கு மீண்டும் தேர்தல் 1998ஆம் ஆண்டு நடைபெற்றது. பாஜக மீண்டும் தனிப் பெரும் கட்சியாக மிளிர்ந்தது.

தமிழகத்தில் 18 இடங்களை அதிமுக கைப்பற்றியது. பாஜக, ஜெயலலிதாவின் ஆதரவைக் கோரியது. ஆனால் கிட்டத்தட்ட ஒரு வாரம் இழுத்தடித்த பின்னர்தான் ஆதரவுக் கடிதத்தைக் கொடுத்தார் ஜெயலலிதா.

பாஜகவை நடுங்க வைத்தார் இந்த ஒரு வார காலமும். அத்தோடு முடியவில்லை துயரம். 14 மாதங்கள் நீடித்த பாஜக ஆட்சியில் அதிமுகவால் படாதபாடு பட்டார் வாஜ்பாய்.

தன் மீதான வழக்குகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் அப்போதைய கருணாநிதி அரசை கலைக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தொடர்ந்து நெருக்கி வந்ததாக கூறப்பட்டது.

அவ்வாறு செய்யாவிட்டால் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்பட்டது.

ஆனால் வாஜ்பாய் பணியவில்லை. இதையடுத்து ஜெயலலிதா, வாஜ்பாய் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டார். இதனால் வாஜ்பாயின் 2வது ஆட்சி கவிழ்ந்தது.

ஜெயலலிதாவின் உருட்டல் மிரட்டல்களை 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி சென்னை மெரினாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தின்போது வாஜ்பாயே தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என மிரட்டியதற்கு தான் மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதான் பாஜகவையும், திமுகவையும் நெருங்கி வர வைத்தது. அடுத்த தேர்தலில் பாஜக, திமுகவுடன் கூட்டணி வைத்து அமோக வெற்றி பெற்றது. வாஜ்பாய் அமைச்சரவையில் திமுகவும் இடம் பெற்றது. இந்த ஆட்சி முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தது.

5313 total views