யாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது தெரியுமா? உயிரை பறிக்கும் ஆபத்துக்கள் ஏற்படும்... ஜாக்கிரதை!

Report
0Shares

ஆரோக்கியமாக கருதப்படும் பப்பாளியை சிலர் சாப்பிட கூடாது. சாப்பிட்டால் அது உயிருக்கே ஆபத்தினை ஏற்படுத்தும்.

பப்பாளியில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பது அனைவருக்கும் தெரியும்.

அதோடு, பப்பாளி இலைகளின் சாறு கொசுக்களால் வரும் டெங்கு காய்ச்சலை எதிர்த்துப் போராடுவதற்கும், பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் இந்த சுவையான பழத்தில் சில பக்கவிளைவுகளும் உள்ளன. இது குறித்து முழுமையாக பார்க்கலாம்.

  • பழுக்காத பப்பாளி சிலருக்கு அழற்சியை உண்டாக்கும்.
  • ஆகவே பப்பாளி காயை சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள் அல்லது சென்சிட்டிவிட்டி/உணர்திறனை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், அதனால் கடுமையான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்.
  • பப்பாளி பழத்தை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், அது உணவுக்குழாயை சேதப்படுத்தும்.
  • பப்பாளியின் விதைகளும், வேரும் கருக்கலைப்பை ஏற்படுத்தும்.
  • பழுக்காத பப்பாளி கருப்பையின் சுருக்கத்திற்கு வழிவகுக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் மறந்தும் பப்பாளி சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
  • நீங்கள் ஏற்கனவே உயர் இரத்த அழுத்தத்திற்கு மருந்துகளை எடுத்து வருபவராயின், அளவுக்கு அதிகமாக பப்பாளியை சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று குறைத்துவிடும்.
  • இது மிகவும் ஆபத்தானது. ஆகவே அளவாக சாப்பிட்டு, பப்பாளியின் பலனைப் பெற முயற்சி செய்யுங்கள்.
  • பப்பாளியை அதிகம் உட்கொள்வது நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும்.
  • ஏனெனில் பப்பாளியில் பென்சில் ஐசோதியோசயனேட் என்னும் பொருள் உள்ளது. இது தான் இந்த நச்சுத்தன்மைக்கு காரணமாகும்.
  • பப்பாளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. என்ன தான் வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க அவசியமானதாக இருந்தாலும், அளவுக்கு அதிகமான வைட்டமின் சி சிறுநீரக கற்களை உண்டாக்கும்.

loading...