இறைச்சியில் தேங்கி வடிகின்ற ரத்தத்தை பார்த்தே மட்டன் வாங்களாம்! எப்படி பார்த்து வாங்கணும் தெரியுமா? இப்படி இருந்தால் பார்க்க கூட வேண்டாம்

Report
294Shares

பொதுவாக மட்டன் வாங்கினால் தொடைப் பகுதிகளில் சதை அதிகமாக இருக்கும் என்பதால் அந்த பகுதியைக் கேட்டு வாங்குவோம்.

ஆனால் தொடைப் பகுதியில் சதை அதிகமாக இருந்தாலும் சாப்பிடச் சற்று கடினமானதாக இருக்கும்.

அதற்குக் காரணம் என்ன தெரியுமா? பொதுவாக ஆடு நடக்கின்ற பொழுது, அதிகமாக அசைகின்ற தசைகள் கொஞ்சம் கடினமானதாக இருக்கும்.

அதனால் தான் எப்போதும் மட்டன் வாங்குகின்ற பொழுது நெஞ்சுப் பகுதி மற்றும் நெஞ்சுக்குப் பின்புறம் உள்ள முதுகுத் தசைப்பகுதியை வாங்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள தசைகள் மிகவும் மென்மையானதாக இருக்கும்.

ஆரோக்கியமான ஆடா என்பதையெல்லாம் வெட்டி தொங்க விட்டிருக்கும் இறைச்சியில் தேங்கி வடிகின்ற ரத்தத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

நல்ல ஆரோக்கியமான ஆடாக இருந்தால் வெட்டப்படும்போது உடலில் ரத்தம் எங்கும் தங்காமல் வடிந்துவிடும்.

எங்கும் தேங்கியிருக்காது. இதுவே ஏதேனும் நோய்வாய்ப்பட்ட ஆடாக இருந்தால் ஆங்காங்கே சிறிது சிறிது ரத்தம் தேங்கியிருக்கும். இதுவே ஆடு இறந்து போனபின் அறுத்ததாக இருந்தால் ரத்தம் முழுவதும் அப்படியே உடலில் படிந்திருக்கும். எனவே இனி மட்டன் வாங்கும் போது இந்த விடயங்களை நினைவில் கொள்ளுங்கள்.
loading...