வீரியத்தை அதிகரிக்க உலர் திராட்சையை அதிகாலையில் இப்படி சாப்பிடுங்கள்.. பலனளிக்கும் தகவல்!

Report
277Shares

திராட்சையை உலர வைத்துப் பெறப்படும் உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது.

அதிலும் இந்த பொருள் ஆயுர்வேதத்தில் பல்வேறு பிரச்சனைகளை குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்றும் சொல்லலாம்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும்.

மேலும், தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

காமாலை நோய் குணமடையும்: மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

உலர் திராட்சை பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.

உலர் திராட்சையில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.

இரவு படுக்கும் முன் 20 பழங்களை சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டை பிரச்சினைகள் குணமடையும்.

மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலரோகம் குணமடையும்.

loading...