ஆங்கில மருத்துவத்தையும் அடித்து தூக்கும் தமிழர்களின் ஒரே ஒரு சூப்! கெட்ட கொழுப்பும் கரைந்து மாயமாகிடும்

Report
613Shares

உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க தினமும் மிக கஷ்டமான உடல் பயிற்சிகள் மற்றும் மிக கஷ்டமான வழிமுறைகள் ஆகியவற்றை மிகவும் கஷ்ட்டப்பட்டு செய்தாலும், உடல் எடை எளிதில் குறையாது.

இதனை எளிய முறையில் குறைக்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.

அந்தவகையில் தற்போது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கான உதவும் சூப்பரான சூப் ஒன்றை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • பிஞ்சு வெண்டைக்காய் - 7
  • உப்பு - சிறிது
  • இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய் - 3 டீஸ்பூன்
  • துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் - 1 கப்
  • அலங்கரிக்க
  • கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல், சீரகத்தூள் - சிறிது,

செய்முறை

கொத்தமல்லி, வெண்டைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை பொன்னிறமாக வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.

மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சைவாசனை போக வதக்கிய பின்னர் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் ஊற்றி கொதி விடவும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்த வெண்டைக்காய் மேலே தூவி, சீஸ் துருவல், கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

loading...