க்ரீன் டீ பொடிகள் கெடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது பலரும் அறியாத செய்தியாகும்.
மற்ற உணவுப் பொருட்களைப் போலவே பதப்படுத்தப்பட்ட க்ரீன் டீ பொட்டலங்கள் காலாவதியாக வாய்ப்புகள் உள்ளன.
க்ரீன் டீ பொட்டலங்களை வாங்கும் போது அதன் காலாவதியாகும் தேதியைப் பாா்க்க பலரும் மறந்துவிடுகின்றனா்.
ஆனால் மிகத்தரம் மிகுந்த க்ரீன் டீ 30 நிமிடங்களுக்குள் கெட்டுவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
க்ரீன் டீ பொடிகளை சேமித்து வைப்பதில் இருந்து அவற்றைக் காய்ச்சுவது வரை, அவற்றில் உள்ள பிரச்சினைகள் க்ரீன் டீயின் சுவையையும் மற்றும் அவற்றின் நறுமணத்தையும் மிக எளிதாகக் கெடுத்துவிடும்.
ஆகவே க்ரீன் டீ பொட்டலங்கள் வாங்குவதற்கு முன்பாக அவற்றின் ஆயுள் காலத்தைப் பாா்த்து வாங்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
க்ரீன் டீ ஏன் விரைவில் காலாவதியாகிறது?
- மற்ற தேனீா் பொடிகளை விட க்ரீன் டீ என்று அழைக்கப்படுகிற தேயிலைப் பொடிகள் மிகவும் மென்மையாக இருக்கும்.
- அதனால் அவற்றை சாியான முறையில் பாதுகாப்பாக வைக்கவில்லை என்றால் மிக விரைவில் அதன் வாசனை, நிறம் மற்றும் சுவை ஆகியவற்றை இழந்துவிடும்.
- குறிப்பாக க்ரீன் டீயை அதிகமான நேரம் சூாிய ஒளி அல்லது வெப்பம் அல்லது ஈரப்பதம் மிகுந்த இடங்களில் வைத்திருந்தால் அதன் தரம் மிக எளிதாகக் கெட்டுவிடும்.
- ஆகவே க்ரீன் டீயை தகுந்த பாதுகாப்பான பெட்டியில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். தயாாிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் க்ரீன் டீயை அருந்திவிட்டால் அது நறுமணத்தோடும் அதே நேரத்தில் சுவையாகவும் இருக்கும் .
- க்ரீன் டீயின் தரத்தை எவ்வாறு கண்டறியலாம்?
- க்ரீன் டீ இருக்கும் டப்பாவைத் திறந்து பாா்க்கும் போது, அதிலிருந்து மணம் வரவில்லை என்றால் அல்லது அந்த தேயிலைப் பொடிகளில் ஈரப்பதம் இருப்பது போல் தொிந்தால் அவற்றைப் பயன்படுத்துக்கூடாது.
- தேயிலைப் பொட்டலங்களில் இருந்து வேறுவிதமான வாசனை வந்தால், அந்த தேயிலைப் பொடிகளையும் பயன்படுத்தக்கூடாது.
- தேயிலைப் பொடிகள் ஒன்றோடு ஒன்று கலந்து அவற்றில் கட்டிகள் சோ்ந்துவிட்டால், அவற்றையும் பயன்படுத்தக்கூடாது.
- தேயிலைப் பொட்டலங்கள் தயாாிக்கப்பட்டு 3 வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தால், அவற்றைத் திறக்காமலே வெளியில் எறிந்துவிட வேண்டும். இல்லை உயிருக்கே உலை வைக்கும் ஆபத்துகளை ஏற்படுத்தும் ஒரு பானமாக கரீன் டீ இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.