இந்த விதையை தினமும் சாப்பிட்டால் உடம்பில் இருக்கும் இத்தனை கொடிய நோய்களும் அலண்டு ஓடி விடும்!

Report
568Shares

நம்மில் பலருக்கு ஆளி விதையின் நன்மைகள் குறித்து முழுமையான தெரியாது.

இந்த சிறிய விதை ஏராளமான ஊட்டச்சத்துக்கள் தன்னுள் கொண்டுள்ளது.

இப்போது தினமும் ஆளி விதையை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அற்புதங்கள் என்னென்ன என்பதை காண்போம்.

 • ஆளி விதை மார்ப புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பை அளிக்கும்.
 • கூடுதலாக, ஆளி விதைகளில் காணப்படும் ஆல்பா-லினோலெனிக் அமிலம் என்னும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுப்பதாக கருதப்படுகின்றன.
 • ஆளி விதை இரத்த அழுத்தத்தைக் குறைக்க அறியப்படுகிறது.
 • ஆல்பா-லினோலெனிக் அமிலம் ஆளி விதையில் உள்ள ஒரு அத்தியாவசிய கொழுப்பு அமிலமாகும்.
 • இது உடலால் உற்பத்தை செய்ய முடியாது என்பதால் உணவின் மூலம் மட்டுமே பெற முடியும். இந்த கொழுப்பு அமிலம் இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் படிவதைத் தடுத்து, இதய நோயின் அபாயத்தைத் தடுக்கிறது.
 • இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
 • அதே வேளையில் கரையாத நார்ச்சத்து அதிக நீரை மலத்துடன் பிணைக்க அனுமதித்து, மலம் எளிதில் வெளியேறச் செய்கிறது.
 • ஆளிவிதைகளில் உள்ள அதிக நார்ச்சத்தினால் தான் இது ஏற்படுகிறது.
 • நார்ச்சத்து பித்த உப்புக்களுடன் பிணைந்து, உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
 • இதன் விளைவாக, இரத்தத்தில் இருந்து கொழுப்புக்கள் பிரித்தெரிடுக்கப்பட்டு கல்லீரலுக்குள் இழுத்து பித்த உப்பாக மாற்றி, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.
 • ஆளி விதை பசியைத் தடுக்கிறது. பசியை ஆளி விதைக் குறைப்பதால், இது ஒருவரது உடல் எடையைக் குறைக்க பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
 • எனவே நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தால், தினமும் 25 கிராம் ஆளி விதை பொடியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.