நீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா?.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..!

Report
783Shares

திருமணமான பல தம்பதிகள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை கருவுறாமல் இருப்பது. இதனால் பல வருடங்களாக குழந்தையைப் பெற முயற்சித்து பல தம்பதிகள் தோல்வியடைந்துள்ளனர்.

இதற்கு பல காரணங்களும் உண்டு. அதில் ஆரோக்கியமற்ற உணவு, உடற்பயிற்சியின்மை, மாசடைந்த சுற்றுச்சூழல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மேலும், இன்றைய நவீன வாழ்க்கை முறையானது மன அழுத்தம் நிறைந்ததாக இருப்பதால், அதுவும் கருவுறாமைக்கான ஒரு காரணமாகும்.

இப்போது கருவளத்தை அதிகரித்து விரைவில் கர்ப்பமாக உதவும் சில உணவுகளைக் காண்போம்.

இந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் ஒரு நல்ல செய்தி விரைவில் உங்கள் காதுகளை எட்டும்.

ஈரலில் குறிப்பாக மாட்டு ஈரலில் கொழுப்பில் கரையும் வைட்டமின்களுடன், வைட்டமின் ஏ உள்ளது.

மேலும், இது அதிகளவில் இரும்புச்சத்தை கொண்டுள்ளதால், கருச்சிதைவு மற்றும் தாய்வழி இரத்த சோகை ஆகியவற்றைத் தடுக்க உதவுகிறது.

மாதுளையில் பல விதைகள் இருப்பதால், நீண்ட காலமாக அது கருவுறுதல் மற்றும் குழந்தை பிறப்புடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

இதுக்குறித்த எந்த ஒரு அறிவியல் காரணமும் இல்லை என்றாலும், ஒரு சுவாரஸ்மான ஒன்றாக உள்ளது. அறிவியலைப் பொறுத்தவரை, மாதுளையில் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளன.

2014 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஒரு ஆய்வில், போதுமான ஆரோக்கியமான விந்தணுக்கள் இல்லாத 70 ஆண்களுக்கு மாதுளம் பழத்தின் சாறு மற்றும் பொடி தினமும் கொடுக்கப்பட்டது.

மூன்று மாத சிகிச்சைக்கு பின், அந்த ஆண்களின் விந்தணு இயக்கம் 62% அதிகரித்திருந்தது தெரியவந்தது.

தக்காளியில் லைகோபைன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு அதிகளவில் நிறைந்துள்ளது.

இது கருவுறுதலை அதிகரிக்க உதவும். முக்கியமாக இதில் உள்ள லைகோபைன் ஆண் கருவுறுதலை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

திணையில் புரோட்டீன், ஜிங்க் மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை அதிகம் உள்ளது. இவை கருத்தரிக்க உதவுவதோடு, ஆரோக்கியமான கரு வளர்ச்சிக்கும் உதவி புரிகிறது.

கிரீக் யோகர்ட்டில் கால்சியம், புரோபயோடிக்குகள் மற்றும் வைட்டமின் டி உள்ளன. இவை அண்டவிடுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

திருமணமான ஆண்கள் சூரிய காந்தி விதைகளை அன்றாடம் சிறிது சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இது விந்தணுக்களின் அளவை சரியாக பராமரிக்கும்.

இந்த விதைகளில் வைட்டமின் ஈ என்னும் அத்தியாவசிய ஊட்டச்சத்து, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, விந்து இயக்கத்தையும் அதிகரிக்கும்.

loading...